உலகிலேயே அதிவேக ரயிலை அறிமுகப்படுத்த உள்ளது சீனா…. காந்த இழுப்பு விசை தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் இந்த ரயில், ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் சவால் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
7 நிமிடங்களில் 620 கிலோ மீட்டர் வேகம்… ரேஸில் விமானத்தை முந்தும் ஆற்றல்… எனச் சர்வதேச அளவில் அதிவேகமான ரயிலை அறிமுகப்படுத்த உள்ளது நமது அண்டை நாடான சீனா..
MAGLEV எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில் நம்ப முடியாத வேகத்தை மட்டுமல்ல, அமைதியான, தடையில்லாத பயணத்தில் ஒரு புரட்சியையே உருவாக்கும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களில் MAGLEV எனப்படும் காந்த இழுப்பு விசை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பதால், இந்த ரயிலில் உராய்வின்றி, வசதியான smooth ஆன பயண அனுபவத்தைப் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சுரங்கத்தில் நடைபெற்ற Maglev ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்தகட்ட மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கியுள்ளது சீனா.
சர்வதேச அளவில் புல்லட் ரயில்கள் மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வரும் நிலையில், சீனாவின் Shanghai Maglev ரயில் மணிக்கு 431 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இதனை முறியடிக்கும் விதமாக உலகிலேயே மிக அதிவேக ரயிலை அறிமுகப்படுத்தியிருக்கிறது சீனா…
லோகோ பைலட் இல்லாத இந்த தானியங்கி ரயில் தரையில் பறக்கும் விமானம் என்றும், தண்டவாளத்தில் இயக்கப்பட்டாலும் ஆகாயத்தில் பறப்பது போன்ற அனுபவத்தைத் தரும் என்றும் வர்ணிக்கப்பட்டு வருகிறது.