பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம் : 1500 கி.மீ. இலக்கை தாக்கி அழித்த இந்தியாவின் அசுரன்!
Sep 17, 2026, 05:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம் : 1500 கி.மீ. இலக்கை தாக்கி அழித்த இந்தியாவின் அசுரன்!

Murugesan M by Murugesan M
Jul 15, 2025, 08:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராணுவ பலத்தை மேம்படுத்தும் விதமாக புதிய ஹைபர் சோனிக் க்ரூஸ் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது இந்தியா. ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கி அழித்ததாகப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அறிவித்திருக்கிறது.

ஒலியை விட 8 மடங்கு வேகம்… 1500 கிலோ மீட்டர் சென்று தாக்கும் திறன் எனப் பிற நாடுகளை மிரள வைத்துள்ளது இந்தியாவின் புதிய ஹைபர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை சோதனை.

எதிரி நாடுகளின் இலக்குகளை மிகவும் துல்லியமாகத் தாக்கும் வகையிலான அதிநவீன ஏவுகணைகளை  புரோஜக்ட் விஷ்ணு திட்டத்தின் கீழ், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் பிரமோஸ், அக்னி-5, ஆகாஷ் அமைப்பையும் மேம்படுத்தி வருகிறது.

அதன்படி, தயாரிக்கப்பட்ட ஹைபர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை தற்போது பயன்பாட்டில் உள்ள பிரமோஸ் ஏவுகணையைவிட மிக ஆபத்தானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 11 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப் பாயும் ஹைபர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை, ஆயிரம் முதல் 2000 கிலோ வெடிமருந்துகள் மற்றும் அணு ஆயுதங்களைச் சுமந்துச் சென்று தாக்கும் திறன் கொண்டது.

குறைந்த உயரத்தில் பறக்கும் இந்த ஏவுகணை, தற்போது பயன்பாட்டில் உள்ள ரேடாரின் கண்களில் மண்ணை தூவி, அதிவேகத்தில் சென்று இலக்கை அழிக்கக் கூடியது. நிலம், கடல் அல்லது வான் பரப்பு என எங்கிருந்து வேண்டுமானாலும் ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரமோஸ் ஏவுகணை மணிக்கு மூவாயிரத்து 675 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் நிலையில், புதிய ஹைபர் சோனிக் ஏவுகணையின் வேகத்தை பிரமோஸை விட மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது DRDO.

புதிய ஹைபர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ள நிலையில், ஹைபர்சோனிக் தொழில்நுட்பம் கொண்ட ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த வரிசையில் , நான்காவது நாடாக இந்தியாவும் இணைந்துள்ளது.

சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல்கள், சர்வதேச அளவில் பதற்றமான சூழல் போன்றவற்றிற்கு மத்தியில் புதிய ஹைபர்சோனிக் ஏவுகணை பரிசோதனை நடத்தியிருப்பது இந்திய ராணுவத்தின் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Tags: indian army3 times faster than Brahmos: India's monster that hit and destroyed a target at 1500 kmஇந்தியாவின் அசுரன்பிரம்மோஸை விட 3 மடங்கு வேகம்புதிய ஹைபர்சோனிக் ஏவுகணைபிரமோஸ் ஏவுகணைindian army news today
Share
Tweet
SendShare
Previous Post

மணிக்கு 620 கி.மீ. வேகம் : விமானத்தை முந்தும் “FLOATING TRAIN”!

Next Post

கனடாவில் ஜெகந்நாதர் ரத யாத்திரை : ஊர்வலத்தில் முட்டை வீச்சு – பின்னணியில் காலிஸ்தான் கும்பல்?

Related News

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

Load More

அண்மைச் செய்திகள்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

இன்றைய தங்கம் விலை!

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies