தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
அதிமுக கூட்டணி ஒற்றுமையாக, வலிமையாக உள்ளது என்றும் 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுத் தனித்து ஆட்சி அமைக்கும் என்று இபிஎஸ் கூறினார்.
ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதைச் சுற்றுப்பயணத்தின் போது தெரிந்து கொண்டேன் என்றும் திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது என்றும் இபிஎஸ் குற்றம்சாட்டினார்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் ஒரு நாடகம் என்றும் 4 ஆண்டுகளாக ஒன்றுமே செய்யாமல் தற்போது குறைகளைக் கேட்கிறார்கள் என்று இபிஎஸ் கூறினார்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மக்களை ஏமாற்றும் தந்திர செயல் என்றும் குறைகளைத் தீர்ப்பதாகக் கூறி மக்களிடம் செல்போன் எண்ணைப் பெற்று உறுப்பினராகச் சேர்க்கின்றனர் என்றும் இபிஎஸ் குற்றம்சாட்டினார்.