மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் உயிரிழந்த அன்று அதிகாலை, அவரது சகோதரர் நவீன்குமாரை தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார், போலீசார் விசாரணையின்போது அடித்துக் கொல்லப்பட்டார்.
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். தனி நீதிபதி விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் தற்போது சிபிஐ விசாரணையைத் துவங்கியுள்ளது.
குறிப்பாக சிபிஐ டி.எஸ்.பி மோகித் குமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பவம் நடந்த அறநிலையத்துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கடந்த 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்த அன்று, தனிப்படை போலீசார் அவரது சகோதரர் நவீன் குமாரையும் வேனில் ஏற்றி அழைத்துச் சென்ற புதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சிபிஐ விசாரணை தொடங்கியுள்ள நிலையில், வெளியாகியுள்ள இந்த புதிய சிசிடிவி முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.