காவல்துறையைக் கையில் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படாத முதலமைச்சராக இருப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர் அளித்த பேட்டியில்,
காவல்துறையைக் கையில் வைத்துள்ள முதலமைச்சர் செயல்படாத முதலமைச்சராக உள்ளார் என்றும் வழக்கை சிபிஐ விசாரித்தால் நீதி கிடைக்கும் என்ற மக்கள் மத்தியில் உள்ளது என எல்.முருகன் கூறினார்.
போதைப்பொருட்களால் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று குற்றம்சாட்டியவர், தமிழகத்தில் மின்கட்டணம், பத்திரப்பதிவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தோல்வி மனநிலையில் உள்ளார் என எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.