ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா? - நயினார் நாகேந்திரன் கேள்வி!
Aug 31, 2025, 08:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Web Desk by Web Desk
Jul 15, 2025, 06:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி  எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தொடர்ந்து எட்டு நாட்களாக பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி போராடி வரும் நிலையில் அவர்களின் கோரிக்கைகளை  திமுக அரசு கண்டுகொள்ளாது அலட்சியம் காட்டுவதோடு கைது செய்து வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

பணி நிரந்தரம் செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி எண் 181 கீழ் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோருவது தவறா? தேர்தல் நேரத்தில் மட்டும் நேரில் சென்று ஆசிரியர்களுக்கு ஆதரவு அளிப்பதும், பின் ஆட்சிக் கட்டிலில் ஏறியதும் அதிகாரிகளைப் பேச விட்டு அலட்சியத்துடன் அமர்ந்திருப்பதும் நியாயமா? தங்கள் உரிமைக்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் ஆசிரியர்கள் போராடட்டும் என அலைக்கழிப்பதால் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனும் பாதிக்கப்படும் எனும் அடிப்படை உண்மையைக்கூட உணர இயலாதா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆசிரியர்களை வதைத்தது போதாதென்று, ஆசிரியர்கள் போராட்டத்தை ஒளிப்பதிவு செய்த செய்தியாளர்களையும் காவலர்கள் தள்ளி விட்டிருப்பது திமுக அரசின் அராஜகத்தைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா? ‘நாடு போற்றும் நல்லாட்சி’ என்று விளம்பரம் செய்வதை விட்டுவிட்டு உடனடியாக பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலனைக் காக்கும் பொருட்டு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நாளை தமிழக பாஜக போராட்டக் களத்தில் துணை நிற்கும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: Is the Dravidian model government the one that deceives everyoneand journalists? - Nainar Nagendran questionsதிராவிட மாடல் அரசா?DMKMK StalinstudentsNayanar Nagendran mlaincluding teachers
ShareTweetSendShare
Previous Post

பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாள் : தமிழக ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை!

Next Post

முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட சரோஜா தேவியின் உடல்!

Related News

சேலம் மாவட்டத்தில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – 2000க்கும் மேற்பட்ட சிலைகள் கரைப்பு!

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் கரைக்கப்பட்ட சிலைகள்!

தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக பதவியேற்பு – வெங்கட்ராமன் கடந்து வந்த பாதை!

தமிழக சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் பொறுப்பேற்பு!

தற்சார்பு பாரதம் உருவாக சுதேசி பொருட்களுக்கு முன்னுரிமை அளிப்போம் – நயினார் நாகேந்திரன்

தமிழக பொறுப்பு டிஜிபி நியமனம் – அண்ணாமலை கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

2038-ல் 2-வது பெரிய பொருளாதாரம் : அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முன்னேறும் இந்தியா!

சத்ய சாய் பாபா நூற்றாண்டு விழா : குமரி – புட்டபர்த்தி தொடர் ஓட்டம் தொடக்கம்!

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் – லால்பக்சா ராஜா விநாயகரை தரிசனம் செய்தார் ஜே.பி.நட்டா!

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் 50-க்கும் குறைவான ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது – ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி

குற்றாலத்தில் சீரான நீர்வரத்து – சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்த சீனாவுடன் இணைந்து செயல்படுவோம் : ரஷ்ய அதிபர் புதின் உறுதி!

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை – தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு!

நாகை மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை உயர்வு!

திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை கூட்டமின்றி தரிசனம் செய்த பக்தர்கள்!

வரும் பண்டிகை காலங்களில் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies