படத்தில் நடிக்கப் பெற்ற 6 கோடி ரூபாய் முன்பணத்தைத் திரும்பத் தரக்கோரி, பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு நடிகர் ரவி மோகன் பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான மனு நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களது நிறுவனம் அளித்த முன்பணத்தை ரவி மோகன் பயன்படுத்தவும், வேறு நிறுவனங்களின் தயாரிப்பில் அவர் நடிக்கவும் தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
ரவி மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆறு கோடி ரூபாய் பெற்றுக்கொண்டது உண்மை தான் எனவும், ஆனால் கால்ஷீட் கொடுத்தும் பணிகளைத் தொடங்காத பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம் கூடுதலாக 10 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, மனு குறித்து நடிகர் ரவி மோகன் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஜூலை 23ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.