உலகின் மிக வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் பௌஜா சிங் நடைப்பயிற்சி சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார்.
பஞ்சாப்பைச் சேர்ந்த 114 வயது மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் பெளஜா சிங், ஜலந்தர்-பதான் கோட் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பியாஸ் கிராமத்தில் தனது வீட்டிற்கு வெளியே நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
இந்த விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 89 வயதில் சாலை விபத்தில் மனைவியையும், மகனையும் இழந்த பிறகு அந்த துக்கத்தில் இருந்து மீண்டு வருவதற்காக மாரத்தான் ஓடத் தொடங்கி, மக்களிடையே நம்பிக்கைக்கும், தைரியத்திற்கும் அடையாளமாக பெளஜா சிங் மாறினார்.