தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர உள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் அதிமுக, பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் நிர்வாகிகளுக்குத் தேர்தல் குறித்து ஆலோசனை வழங்கினர். பின்னர் கூட்டத்தில் பேசிய கே.பி.ராமலிங்கம், திமுக ஆட்சியை அகற்ற இணைந்து செயல்பட வேண்டுமெனக் கூறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர உள்ளதாகவும் தெரிவித்தார்.