திருவள்ளூர் மாவட்டம், ஆரணி ஆற்றில் நடந்து சென்றபோது தவறி விழுந்த அமைச்சர் சா.மு.நாசரை, ஆட்சியர் பிரதாப் தாங்கி பிடித்தார்.
ஆரணி ஆற்றில் 8 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் நடைபெற்று வெள்ளத்தடுப்பு பணிகளை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஆற்றில் நடந்து சென்ற அமைச்சர் சா.மு நாசர் கால் இடறித் தவறி விழுந்தார். அப்போது ஆட்சியர் பிரதாப் அவரை லாவகமாகத் தாங்கி பிடித்ததால் அமைச்சர் கீழே விழாமல் காயங்களின்றி தப்பினார்.