ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் ஒரே கட்சி திமுகதான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் மக்கள் மத்தியில் பேசியவர்,
வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும் என்றும் ஏழைகள் வயிற்றில் அடிக்கும் ஒரே கட்சி திமுகதான் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
கண்ணில் பார்க்க முடியாத காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக என்றும் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
ஓட்டுக்காகவே மகளிர் உரிமைத் தொகை விதியை திமுக அரசு தளர்த்தியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.