கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் புறப்பட்ட சிறிது நேரத்தில் அங்கிருந்த பொதுமக்கள் சற்றும் ஆபத்தை உணராமல், வரவேற்பு வளைவின் மீது ஏறி அலங்காரத்திற்காக அதில் கட்டப்பட்டிருந்த பழங்களை எடுத்துச் சென்றனர்.
அப்போது அன்னாச்சி பழத்தை எடுக்க முயன்ற ஒரு இளைஞரின் கை வளைவில் இருந்து நழுவ, அவர் மற்றொரு கையால் வளைவை பிடித்து கீழே விழாமல் தொங்கினார். இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.