தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயர்த்த வேண்டும் என்றால் ஆளும் அரசில் பாமக பங்கேற்க வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
பாமகவின் 37ஆம் ஆண்டு விழாவையொட்டி எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ் மொழி, தமிழக மக்கள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பாமக வலிமையுடன் பயணிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக மட்டுமின்றி, உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால் ஆளும் அரசில் பாமகவும் பங்கேற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆளும் அரசில் பங்கு பெறுவது நமது உரிமை எனத் தெரிவித்துள்ள அன்புமணி, அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்ட நாம் உறுதி ஏற்போம் எனக் கூறியுள்ளார்.