ராமேஸ்வரத்தில் திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்து வருகிறது.
இந்நிலையில், ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒருமணி நேரத்திற்கு மேல் கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில், வாகன ஓட்டிகள் நனைந்தபடி வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.