ஆடி மாத பூஜைக்காகச் சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள், ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும் நிலையில், ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படவுள்ளது.
வரும் 21ஆம் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்புப் பூஜைகள் நடைபெறும் என்றும், 21ஆம் தேதி அத்தாழ பூஜைக்குப் பிறகு இரவு 10.30 மணிக்குக் கோயில் நடை அடைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.