பாஜகவை பார்த்து முதலமைச்சர் ஸ்டாலின் பயப்படுகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உரையாற்றிய அவர், திமுக கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் மதவாத கட்சியா? என கேள்வி எழுப்பினார். தனது சுற்றுப்பயணத்திற்கு இடையூறு செய்ய முதலமைச்சர் சிதம்பரம் வந்ததாகவும், பாஜகவை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயப்படுகிறார் என்றும் கூறினார்.
பிரதமர் மோடிக்கு வெள்ளை கொடி பிடித்த வேந்தர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றும், ஜெயலலிதா மறைந்த பின் அதிமுகவை உடைக்க ஸ்டாலின் முயற்சித்தார் என்றும் இபிஎஸ் கூறினார்.