முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஆட்சிக் காலத்தை எண்ணிக் கொண்டிருப்பதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், சாலாமேட்டில் இயங்கி வரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை விரிவாக்க மையத்தை ரத்து செய்த திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய சி.வி.சண்முகம், அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா பெயரில் கொண்டுவரப்பட்ட பல்கலைக்கழகத்தை திமுக அரசு மூடியதாகக் குற்றம் சாட்டினார்.
திமுக ஆட்சியில் கோயில் பணத்தை எடுத்து கல்லூரி கட்டப்பட்டதாகவும், கோயில் பணமும், நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், திமுக அரசு அனைத்தையும் தனியாருக்குக் கொடுக்க நினைக்கிறது என சி.வி.சண்முகம் கூறினார்.