பாஜக – அதிமுக கூட்டணியால் முதலமைச்சர் ஸ்டாலின் அச்சத்தில் இருக்கிறார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக எனும் விளம்பர ‘கம்பெனி’-யின் அடுத்த வெளியீடுதான் ஓரணியில் தமிழ்நாடு என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாஜக – அதிமுக கூட்டணியால் அச்சத்தில் உறைந்து இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வீடு வீடாகச் சென்று திமுகவுக்கு ஆள் சேர்க்கும் வேலையைச் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்
ஆட்சியின் துன்புறுத்தல் போதாது என வீட்டிற்கே சென்று அச்சுறுத்தும் ஸ்டாலினையும், திமுகவினரையும் மக்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், பல்வேறு குற்றச் சம்பவங்களால் தமிழகம் சீரழிவைக் கண்டு வருகிறது எனக் குறிப்பிட்டுள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன், கொடூர திமுக ஆட்சிக்குத் தேர்தலில் பதிலடி கொடுக்க தமிழக மக்கள் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.