மானம் இருக்கும் ஒரு காங்கிரஸ் கட்சிக்காரர் கூட திமுக கூட்டணியில் இருக்க மாட்டார் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தான் வெளியிட்ட “திமுக ஃபைல்ஸ்” ஆவணம் தொடர்பான அவதூறு வழக்கில் சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான பின் அவர் அளித்த பேட்டியில்,
1967 தேர்தலில் பொய்களைச் சொல்லி காமராசரை திமுக வீழ்த்தியது என்றும் மானம் இருக்கும் ஒரு காங்கிரஸ் கட்சியினர் கூட திமுக கூட்டணியில் இருக்க மாட்டார்கள் என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.
காமராஜர் குறித்துப் பேச திமுகவுக்கு ஒரு சதவீதம் கூட உரிமை இல்லை என்றும் முதலமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு கட்சிப் பணி செய்தவர் காமராஜர் என்று அண்ணாமலை கூறினார்.
4 ஆண்டுகளாக வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு மக்கள் மீண்டும் ஏன் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை தமிழக காங்கிரஸ் தலைவர்களை ராகுல் அல்லது சோனியா கண்டித்தால் வாலை சுருட்டிக் கொண்டு திமுகவின் அடிமாடாக வேலை பார்ப்பார்கள் என்று அண்ணாமலை கூறினார்.
மானமுள்ள காங்கிரஸ்காரன் திமுக கூட்டணியில் இருக்க மாட்டான் என்று அண்ணாமலை தெரிவித்தார்.