சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக நடவடிக்கை எடுத்த டி.எஸ்.பி. வாகனத்தை பறித்த திமுக அரசு - அண்ணாமலை கண்டனம்!
Jul 18, 2025, 01:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக நடவடிக்கை எடுத்த டி.எஸ்.பி. வாகனத்தை பறித்த திமுக அரசு – அண்ணாமலை கண்டனம்!

Web Desk by Web Desk
Jul 18, 2025, 08:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத் துறை டிஎஸ்பி சுந்தரேசன் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனம், எந்தக் காரணமும் கூறப்படாமல் திரும்பப்பெறப்பட்டுள்ளதால், தனது இல்லத்தில் இருந்து, சீருடையுடன் நடந்தே அலுவலகம் செல்லும் காணொளி அதிர்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத் துறை டிஎஸ்பியாகப் பொறுப்பேற்றதில் இருந்து, சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும், போதைப் பொருள்கள் விற்பவர்கள் மீதும், கடுமையான நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் பாராட்டுக்களைப் பெற்றவர்  சுந்தரேசன் என தெரிவித்துள்ளார்.

அனுமதியின்றி செயல்பட்ட 23 டாஸ்மாக் பார்களை மூடியதோடு, சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட 1,200 பேர் மீது வழக்கு தொடர்ந்து, 700 பேரை சிறைக்கு அனுப்பியவர். அவரது நேர்மையான நடவடிக்கைகள் பிடிக்காமல், அவரை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு, அவரது வாகனத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறது திமுக அரசு என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே, கடந்த ஆண்டு, திமுக அரசின் காவல்துறையின் தவறுகள் குறித்து, மனித உரிமைகள் ஆணையத்தில் அறிக்கை கொடுத்ததற்குப் பழிவாங்குவதற்காக, அவரை மயிலாடுதுறைக்கு பணிமாற்றம் செய்தது திமுக அரசு என தெரிவித்துள்ளார்.

தற்போது, மீண்டும் அவரை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. நேர்மையான அதிகாரிகள், திமுக அரசில் பணியாற்ற முடியாது என்பதையே இது காட்டுகிறது. காவல்துறை என்பது மக்களுக்கானது. மக்களுக்காகப் பணியாற்றும் நேர்மையான அரசு அதிகாரியை, திமுக அரசு அவமானப்படுத்துவதும், அலைக்கழிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்,

உடனடியாக, டி.எஸ்.பி. . சுந்தரேசன் அவர்களது அரசு வாகனம் திரும்ப வழங்கப்பட வேண்டும். திமுக அரசின் அரசியல் அழுத்தங்களுக்குப் பணியாமல், தமிழகக் காவல்துறையின் தலைவர்  சங்கர் ஜிவால், தமிழகக் காவல்துறையினரின் தன்மானத்தைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: annamalaiMayiladuthurai District Prohibition Department DSP Sundaresandsp vechile issuedsp pressmeetbjp
ShareTweetSendShare
Previous Post

புதுக்கோட்டை அருகே போலீசார் தாக்கியதில் இளைஞருக்கு கைமுறிவு – மருத்துவமனையில் அனுமதி!

Next Post

அறந்தாங்கியில் தெருநாய் கடித்ததில் 3 மாணவர்கள் காயம்!

Related News

சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில் சாதி பாகுபாட்டை அனுமதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

ஸ்பெயின் : கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காட்சி!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை : 7 நாட்களாகியும் குற்றவாளி கைது செய்யவில்லை என குற்றச்சாட்டு!

நாமக்கல் : அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பாஜக போராட்டம்!

சீனா – பிலிப்பைன்ஸ் இடையே தொடரும் மோதல்!

தஞ்சை : கைதான ஆசிரியர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

வசூலை வாரி குவிக்கும் சூப்பர் மேன் படம்!

சினிமா தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு மும்பை போலீஸ் சம்மன்!

நெல்லை அருகே மாணவர் தற்கொலை விவகாரம் – பள்ளி வாகனத்தை கொளுத்திய உறவினர்கள்!

கியூபா மக்களின் வறுமையை கொச்சைப்படுத்திய அமைச்சரின் பதவி பறிப்பு!

டெண்டர் விடுவதில் முறைகேடு – அதிமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு!

பள்ளிபாளையத்தில் சிறுநீரக விற்பனை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை – திமுக கவுன்சிலர் குற்றச்சாட்டு!

நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை!

பண்ருட்டியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

ஹரித்வாரில் ஹெலிகாப்டர் மூலம் பக்தர்கள் மீது தூவப்பட்ட மலர்கள்!

கட்டளை வாய்க்கால் புனரமைப்பு திட்டத்தை செயல்படுத்த நிதி பற்றாக்குறையா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies