சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ரசல் ஓய்வை அறிவித்தார்.
இதுவரை ஒரு டெஸ்ட், 56 ஒருநாள் போட்டிகள் மற்றும் 84 டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ரசல் விளையாடியுள்ளார்.84 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரசல், 1,078 ரன்கள் எடுத்துள்ளார்.
61 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார், இந்த சூழலில், அடுத்து நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளுடன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.