ஹங்கேரியில் நடைபெற்ற ஒருங்கிணைந்த உலக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுஜீத் கல்கல் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஹங்கேரியில் 2025 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த உலக மல்யுத்த தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் 65 கிலோ ஆண்கள் ஃபிரீ ஸ்டைல் பிரிவில் சுஜீத் கல்கல் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 57 கிலோ ஆண்கள் ஃப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் ராகுல் ஜெர்மனியின் நிக்லாஸ் ஸ்டெச்செலை தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.