பிரபலமான COLDPLAY இசை நிகழ்ச்சியின்போது, ஆஸ்ட்ரோனமர் நிறுவன CEO, சக பெண் அதிகாரி ஒருவருடன் நெருக்கமாக இருந்த காட்சிகள்தான் தான் இன்றைக்கான ஹாட் டாப்பிக்… ‘கிஸ் கேம்’ சர்ச்சையால் உலகம் முழுவதும் பேசு பொருளான ஆண்டி பைரான், தனது மனைவி, குடும்பத்தினர் மற்றும் தனது நிறுவனத்தினரிடம் மனதார மன்னிப்பும் கோரியுள்ளார்.
அமெரிக்காவின் ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆண்டி பைரான் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி கிறிஸ்டின் கேபாட் இடையேயான நெருக்கமான காட்சிகள் இணையத்தில் படுவேகமாக பரவி வருகிறது. சமூக வலைத்தளங்கள் மட்டுமல்ல, எங்குப் பார்த்தாலும் இந்த வீடியோவை பற்றிதான் பேச்சு.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் பாஸ்டன் நகரில் பிரிட்டிஷ் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளில் எடுக்கப்படும் கிஸ் கேம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் மிகவும் பிரபலமானது. நெருக்கமாக இருக்கும் தம்பதிகளை, காதலர்களை திடீரென படம்பிடிப்பதும், அவர்களை பெரிய திரையில் காட்டும்போது பார்வையாளர்கள் ஊக்கப்படுத்தி ஆரவாரம் செய்வது வழக்கம். அன்றும் அவ்வாறே நடந்தது.
கிஸ் கேம், ஒரு ஜோடியை படம் பிடித்து பெரிய திரையில் காட்ட, இதைச் சற்றும் எதிர்பாராத அந்த ஜோடிக்கு அதிர்ச்சி. உடனடியாக முகத்தை மறைத்து இருவரும் நழுவ அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
வீடியோவில் இருந்தவர் பிரபலமான ஆஸ்ட்ரோனமர் என்ற மென்பொருள் நிறுவனத்தின் CEO ஆண்டி பைரான் என்பதும், அவருடன் இருந்தது அதே நிறுவனத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கிறிஸ்டின் கேபாட் என்பதும் தெரியவர வீடியோ மின்னல் வேகத்தில் படுவேகமாக பரவியது. இதனை நெட்டிசன்கள் ‘இணையத்தின் மிகப்பெரிய ஸ்கேண்டல்’ என்று பெயரிட்டு வறுத்தெடுத்து வருகின்றனர்.
ஆண்டி பைரானுக்கு, மேகன் கெர்ரிகன் பைரான் என்ற பெண்ணுடன் திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் குடும்பத்திலும் பிளவை ஏற்படுத்தியது. கிஸ் கேம் சர்ச்சைக்குப் பிறகு மேகன் கெர்ரிகன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்த பைரானின் பெயரை நீக்கியதோடு, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை டீ-ஆக்டிவேட் செய்துவிட்டார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்த ஆண்டி பைரான், மகிழ்ச்சி நிறைந்த இரவாக இருக்க வேண்டிய நிகழ்வு, பொது மேடையில் ஆழமான தவறாக மாறிவிட்டதாக வருத்தம் தெரிவித்துப் பதிவிட்டிருந்தார்.
ஒரு தனிப்பட்ட தருணமாக இருந்திருக்க வேண்டிய நிகழ்வு, தமது அனுமதியின்றி பகிரங்கமானது மிகுந்த கவலை அளிப்பதாகவும் பதிவிட்டிருந்தார். இந்த சம்பவத்தை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வரும் நிலையில், டெஸ்லா நிறுவன CEO எலான் மஸ்க் நன்றாகச் சிரிக்கும் இமோஜியை மட்டும் பதிவிட்டுக் கலாய்த்துள்ளார். இதுவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.