'கிஸ் கேம்' சர்ச்சையில் ஆஸ்ட்ரோனமர் CEO : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - கலாய்த்த எலான் மஸ்க்!
Aug 5, 2026, 03:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

‘கிஸ் கேம்’ சர்ச்சையில் ஆஸ்ட்ரோனமர் CEO : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் – கலாய்த்த எலான் மஸ்க்!

Murugesan M by Murugesan M
Jul 18, 2025, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரபலமான COLDPLAY இசை நிகழ்ச்சியின்போது, ஆஸ்ட்ரோனமர் நிறுவன CEO, சக பெண் அதிகாரி ஒருவருடன் நெருக்கமாக இருந்த காட்சிகள்தான் தான் இன்றைக்கான ஹாட் டாப்பிக்… ‘கிஸ் கேம்’ சர்ச்சையால் உலகம் முழுவதும் பேசு பொருளான ஆண்டி பைரான், தனது மனைவி, குடும்பத்தினர் மற்றும் தனது நிறுவனத்தினரிடம் மனதார மன்னிப்பும் கோரியுள்ளார்.

அமெரிக்காவின் ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆண்டி பைரான் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி கிறிஸ்டின் கேபாட் இடையேயான நெருக்கமான காட்சிகள் இணையத்தில் படுவேகமாக பரவி வருகிறது. சமூக வலைத்தளங்கள் மட்டுமல்ல, எங்குப் பார்த்தாலும் இந்த வீடியோவை பற்றிதான் பேச்சு.

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் பாஸ்டன் நகரில் பிரிட்டிஷ் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளில்  எடுக்கப்படும் கிஸ் கேம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் மிகவும் பிரபலமானது. நெருக்கமாக இருக்கும் தம்பதிகளை, காதலர்களை திடீரென படம்பிடிப்பதும், அவர்களை பெரிய திரையில் காட்டும்போது பார்வையாளர்கள் ஊக்கப்படுத்தி ஆரவாரம் செய்வது வழக்கம். அன்றும் அவ்வாறே நடந்தது.

கிஸ் கேம், ஒரு ஜோடியை படம் பிடித்து பெரிய திரையில் காட்ட, இதைச் சற்றும் எதிர்பாராத அந்த ஜோடிக்கு அதிர்ச்சி. உடனடியாக முகத்தை மறைத்து இருவரும் நழுவ அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

வீடியோவில் இருந்தவர் பிரபலமான ஆஸ்ட்ரோனமர்  என்ற மென்பொருள் நிறுவனத்தின் CEO ஆண்டி பைரான் என்பதும், அவருடன் இருந்தது அதே நிறுவனத்தின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கிறிஸ்டின் கேபாட் என்பதும் தெரியவர வீடியோ மின்னல் வேகத்தில் படுவேகமாக பரவியது. இதனை நெட்டிசன்கள் ‘இணையத்தின் மிகப்பெரிய ஸ்கேண்டல்’ என்று பெயரிட்டு வறுத்தெடுத்து வருகின்றனர்.

ஆண்டி பைரானுக்கு, மேகன் கெர்ரிகன் பைரான் என்ற பெண்ணுடன் திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் குடும்பத்திலும் பிளவை ஏற்படுத்தியது. கிஸ் கேம் சர்ச்சைக்குப் பிறகு மேகன் கெர்ரிகன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்த பைரானின் பெயரை நீக்கியதோடு, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை டீ-ஆக்டிவேட் செய்துவிட்டார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்த ஆண்டி பைரான், மகிழ்ச்சி நிறைந்த இரவாக இருக்க வேண்டிய நிகழ்வு, பொது மேடையில் ஆழமான தவறாக மாறிவிட்டதாக வருத்தம் தெரிவித்துப் பதிவிட்டிருந்தார்.

ஒரு தனிப்பட்ட தருணமாக இருந்திருக்க வேண்டிய நிகழ்வு, தமது அனுமதியின்றி பகிரங்கமானது மிகுந்த கவலை அளிப்பதாகவும் பதிவிட்டிருந்தார். இந்த சம்பவத்தை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வரும் நிலையில், டெஸ்லா நிறுவன CEO எலான் மஸ்க் நன்றாகச் சிரிக்கும் இமோஜியை மட்டும் பதிவிட்டுக் கலாய்த்துள்ளார். இதுவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Tags: எலான் மஸ்க்Netizens roast Astronomer CEO over 'Kiss Game' controversy: Elon Musk is jokingசர்ச்சையில் ஆஸ்ட்ரோனமர் CEO
Share
Tweet
SendShare
Previous Post

கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் : மூடப்படும் ரயில்வே கேட்டால் தவியாய் தவிக்கும் மக்கள்!

Next Post

கோடி கோடியாய் அள்ளிய பிசிசிஐ : ஒரே ஆண்டில் இவ்வளவு வருமானமா?

Related News

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

தங்க மங்கைக்கு நேரில் அழைத்து பாராட்டு; சிறப்பித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிமாக நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies