பிற்போக்குத்தனமான பழக்க வழக்கங்களில் இருந்து பெண்களை விடுவிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் ஹூடாட்மா ஸ்மிருதி மந்திரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பெண்களுக்கு பயிற்சி அளித்தால் அவர்கள் அடுத்த தலைமுறையினரின் வளர்ச்சியையும் உறுதி செய்வர் என தெரிவித்தார்.
ஆண்களுக்கு வழங்கிய திறன்களை பெண்களுக்கும் கடவுள் வழங்கி உள்ளார் என கூறிய மோகன் பாகவத்,
பாரம்பரிய கட்டுப்பாடுகளில் இருந்து பெண்களை விடுவித்து அவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நாடு வளர்ச்சி அடைய பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பது முக்கியம் எனவும் தெரிவித்தார்.