மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசால் 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றத்தால் கைவிடப்பட்டதென் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாகை அவுரித்திடலில் உரையாற்றிய அவர், ஓட்டு போட்ட மக்களைப் பற்றி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அக்கறையில்லை என தெரிவித்தார். கடந்த 4 ஆண்டுகளாக மக்களுடன் ஸ்டாலின் இல்லாததால் தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை கொண்டு வந்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஐம்பது மாதங்களில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெரிய அளவிலான ஒரு திட்டமும் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்த அவர், மக்கள் விரும்பும் ஆட்சியை அதிமுக அரசு வழங்கியதால் செல்லும் இடமெல்லாம் அபரிவிதமான வரவேற்பு உள்ளதாக தெரிவித்தார். ஆட்சியில் மக்கள் அமர வைத்த போது மக்களை பற்றி சந்திக்க வேண்டும். ஆனால் தன் வீட்டு மக்களுக்கு என்ன செய்வேனோ என்ன அதிகாரம் கொடுப்பது என்ற எண்ணமே ஸ்டாலினுக்கு உள்ளதாக இபிஎஸ் குறிப்பிட்டார்.