தமிழக இளைஞர்கள் பொறுப்புடன் செயல்பட்டு, கிராமங்களை தன்னிறைவு மற்றும் வளர்ச்சி பெற்றதாக மாற்ற வேண்டும் என, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில், தொகுதி இளைஞர் கூட்டமைப்பு என்ற தன்னார்வ நிறுவனத்தை அண்ணாமலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மதன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அண்ணாமலை, இளைஞர்கள் ஒன்றிணைந்து தங்கள் சொந்த ஊரை கல்வி, தொழில், விளையாட்டு, நீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேம்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
சென்னை மாநகரம் தூய்மை பணியில் கடைசி இடத்திற்கு சென்று விட்டதாகவும், ஆனால் நாமக்கல் மாநகராட்சி தூய்மை நகரத்திற்கான விருதைப் பெற்றுள்ளது பாராட்டத்தக்கது எனவும் அவர் கூறினார்.
மேலும், மதுவுக்கு அடிமையானவர்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது வேதனை அளிப்பதாகவும் அண்ணாமலை கவலை தெரிவித்தார்.