மக்கள் விரோத ஸ்டாலின் ஃபெயிலியர் மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், ஆட்சிக்கு வந்த 52 மாதங்களில் திமுக அரசு பொய்களை மட்டுமே கூறி மக்களை வஞ்சித்துக் கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார்.
தமிழக மக்களின் உள்ளம் திமுக-வை வீட்டுக்கு அனுப்ப ஒன்றுபட்டு விட்டதாகவும், திமுக என்ன மடைமாற்றம் செய்தாலும் தனது எழுச்சிப் பயணம் தொடரும் எனவும் கூறியுள்ளார்.