புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மீது அன்பும், பாசமும் கொண்டவர் பிரதமர் மோடி என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
எஸ்.ஆர்.சுப்ரமணியத்தின் ஸ்ரீ ராமர் கோயில் அயோத்தி, மெய்ப்பொருள் கண்டேன் உள்ளிட்ட 6 நூல்களின் வெளியீட்டு விழா ஈரோட்டில் நடைபெற்றது.
இதில், அண்ணாமலை, தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் மது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் புத்தகத்தை பெற்றுக்கொண்டு உரையாற்றிய அண்ணாமலை, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 642 அறிக்கைகளை எஸ்.ஆர்.சுப்ரமணியம் எழுதிக் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
கருணாநிதி சிறைக்கு சென்றதை புத்தகமாக அவர் எழுதியுள்ளதாக கூறிய அவர், எம்.ஜி.ஆர் மீது பிரதமர் மோடி மிகுந்த அன்பு கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.