திருவண்ணாமலை அருகே சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த முடியாததால் அரசுப் பேருந்தில் சென்ற பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
செங்கத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு திருவண்ணாமலை நோக்கி அரசு பேருந்து சென்றது. அப்போது பாஸ்ட் ட்ராக்கில் பணம் இல்லாததால் கரியமங்கலம் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் பேருந்தை ஊழியர்கள் நிறுத்தி வைத்தனர்.
பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இதனால் அவ்வழியாக வந்த தனியார் பேருந்தில் ஏறி திருவண்ணாமலைக்கு சென்றனர். தொடர்ந்து பணிமனை அதிகாரிகள் பணம் செலுத்திய நிலையில் அரசுப் பேருந்து அங்கிருந்து புறப்பட்டது.
இந்த சம்பவத்தால் கடும் அதிருப்தி அடைந்த பயணிகள், பாஸ்ட் டிராக்கில் முன்கூட்டியே அதிகாரிகள் பணத்தை செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்…