சத்தியமங்கலம் அருகே திருமணமான இரண்டே நாட்களில் 17 சிறுமி உயிரிழந்த நிலையில் குழந்தை திருமணம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் வெங்கநாயக்கன் பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு கூலி வேலைக்கு சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் சிறுமியின் பெற்றோர், அவரை உறவினர் மகனான தாண்டாம்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு கடந்த 15-ம் தேதி திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து 16ம் தேதி வயிறு வலிப்பதாக கூறிய சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்தார். திருமணமான இரண்டே நாட்களில் சிறுமி உயிரிழந்த நிலையில், அவரை குழந்தை திருமணம் செய்த சக்திவேலை புஞ்சை புளியம்பட்டி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்…