தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான எந்தவித முயற்சியையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை என்றார். ,
சாதி வாரி கணக்கெடுப்பை தமிழகம் முன்னெடுத்துச் சென்று இருக்க வேண்டும் என்றும், சாதி வாரி கணக்கெடுப்பிற்கு பல மாநிலங்கள் உதாரணமாக உள்ளதாகவும் தமிழிசை குறிப்பிட்டார்.