கொள்முதல் செய்யப்பட்டாமல் நெல்மணிகள் மழைநீரில் நனைந்து வீணாகி வருவது பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் பேசிய அவர்,அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் காத்திருக்கும் அவல நிலை உள்ளதாகவும் மக்கள் விரோத மற்றும் விவசாயிகளுக்கு எதிரான ஆட்சி தேவையா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
திமுக ஆட்சிக்கு வரும்போது விலைவாசி அதிகரித்து விடும் என்றும் கூறினார். அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் மதவாத கட்சி என மக்களை திமுகவினர் குழப்புவதாகவும் அவர் சாடினார்.