திமுகவை வீழ்த்த நினைக்கும் ஒருமித்த கருத்துடைய அனைத்து கட்சிகளும் அதிமுகவுடன் கைகோர்க்கலாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக – பாஜக கூட்டணியை பலவீனப்படுத்த திமுக மேற்கொண்ட விஷமப் பிரசாரத்துக்கு பதிலளிக்கவே, நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல எனக் கூறியதாக விளக்கமளித்துள்ளார்.
மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற ஒத்த கருத்துகளை கொண்ட அனைத்து கட்சிகளும், அதிமுகவுடன் இணைய வேண்டும் எனவும் இபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், மக்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், தமிழகத்தில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் கூறியுள்ளார்.
தவெகவுடன் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என விளக்கமளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தம்முடைய எழுச்சிப் பயணத்தில் பாஜக தலைவர்களும், தொண்டர்களும் பெருமளவில் பங்கேற்று வருவதாக தெரிவித்தார்.