புதுமுகங்கள் நடித்து வெளியாகியுள்ள சயாரா படத்தின் வசூல் பாலிவுட் திரையுலகினரை மலைக்க வைத்துள்ளது.
மோகித் சூரி இயக்கத்தில் அகன் பாண்டே மற்றும் அனீத் படா ஆகியோர் நடிப்பில் சயாரா படம் வெளியாகியுள்ளது.
நாயகன் மற்றும் நாயகி இருவருமே இப்படத்தின் மூலமாக தான் அறிமுகமாகினர். இந்நிலையில் இந்த படம் முதல் நாளில் சுமார் 21 கோடியும், 2-வது நாளில் சுமார் 24 கோடியும் வசூல் செய்திருக்கிறது.
இந்த வசூல் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களை விட அதிகமாகும். இந்த படத்துக்காக BOOK MY SHOW டிக்கெட் புக்கிங் தளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் ஏழரை லட்சம் டிக்கெட்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன.
ஒருமணி நேரத்திற்கு 40,000-க்கும் அதிகமான டிக்கெட்கள் தொடர்ச்சியாக புக்கிங் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சென்றால் கண்டிப்பாக சயாரா திரைப்படம் 200 கோடி வசூலை எளிதாகக் கடக்கும் எனக் கூறப்படுகிறது.