சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சில பரிசோதனைகளை மேற்கொள்ள தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்குப் பரிசோதனைகள் நிறைவடைந்ததை அடுத்து, அவர் மீண்டும் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, அங்குத் தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.