மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு தொடர்பாகத் திருப்புவனம் காவல்நிலையத்தில் 4 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கானது, தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் கடந்த 12ம் தேதிமுதல் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. அஜித்குமாரை தனிப்படை காவலர்கள் அழைத்துச் சென்ற இடங்களுக்குச் சென்ற அதிகாரிகள், தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்புவனம் காவல் நிலையம் வருகைதந்த 4 பேர் கொண்ட சி.பி.ஐ குழுவினர், அஜித்குமார் அழைத்துச் செல்லப்பட்ட வழிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக அஜித்குமார் கொலை வழக்கின் சாட்சிகள் இரண்டாவது முறையாக மதுரை ஆத்திகுளத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர்.
தனிப்படை காவலர்களால் அழைத்து செல்லப்பட்ட கோயில் ஊழியர் பிரவீன்குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், வினோத்குமார், அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் ஆகியோர் சிபி அலுவலகத்தில் ஆஜராகினர்.