ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தில் 2வது இடத்தில் உள்ள அதிகாரியான கீதா கோபிநாத், அடுத்த மாதம் பதவி விலகவுள்ளார்.
2019ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தில் தலைமைப் பொருளாதார நிபுணராக கீதா கோபிநாத் பொறுப்பேற்றார். இதன்மூலம் அந்த பதவியை அலங்கரித்த முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.
2022ஆம் ஆண்டு அந்த அமைப்பின் முதல் துணை நிர்வாக இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில், அடுத்த மாதம் அவர் பதவி விலகிவிட்டு, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றச் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.