செங்கல்பட்டு அருகே ஒரு கோடி மதிப்பிலான கஞ்சாவைத் தாம்பரம் மாநகர போலீசார் எரித்து அழித்தனர்.
பள்ளிக்கரணை, கூடுவாஞ்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் 55 வழக்குகளில் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பிலான கஞ்சா, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மொதக் உத்தரவின் பேரில் தென்மேல்பாக்கத்தில் உள்ள மருத்துவ கழிவுகள் எரியூட்டும் இடத்தில் எரித்து அழிக்கப்பட்டது.