ஈரோடு மாவட்டம் நசியனூர் சாலை அருகே நடமாடும் வனவிலங்கைப் பிடிக்க அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நசியனூர் சாலை அருகே உள்ள வணிக வளாக கட்டிடம் பகுதியில் வன விலங்கு ஒன்று நடமாடியது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது வனவிலங்கு சிறுத்தை போல இருந்ததால் அப்பகுதியில் உள்ளவர்கள் அச்சமடைந்தனர்.
எனவே ஊருக்குள் உலா வந்துகொண்டு இருக்கும் விலங்கை விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்தனர்.