பெங்களூருவில் திரைப்பட தயாரிப்பாளர் கேஜிஎஃப் பாபு வீட்டில் சொகுசு கார் தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் சோதனை மேற்கொண்டார்.
திரைப்பட தயாரிப்பாளரும் தொழிலதிபருமான கே.ஜி.எஃப் பாபு, ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் ரேஞ்ச் ரோவர் உள்ளிட்ட பல சொகுசு கார்களை சொந்தமாக வைத்திருக்கிறார்.
இந்த கார்களில் சிலவற்றிற்கு அவர் சாலை வரி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது வீட்டிற்கு சென்ற வட்டார போக்குவரத்து அலுவலர் ஷோபா இது குறித்து விசாரணை மேற்கொண்டார்.