திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுக சுவாமி திருக்கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு 189வது குருபூஜை விழா நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்து சிறப்பு யாகத்தில் கலந்து கொண்டார்.
தொடர்ந்து சன்னியாசிகள் கொடுத்த பிரசாதத்தைச் சேலை முந்தானையில் ஏந்தி அங்குள்ள குளக்கரையில் வைத்து புறங்கை கட்டி மண் சோறு சாப்பிட்டு வழிபட்டனர்.
கடந்த ஆண்டு மண் சோறு சாப்பிட்டு குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் சுவாமிக்குக் காவடி எடுத்தும், எடைக்கு எடை வெள்ளம், சர்க்கரை, காசு என வழங்கியும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.