பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு மன்னர் சார்லசை சந்தித்துப் பேசினார்.
அரசு முறை பயணமாகப் பிரிட்டன் சென்ற பிரதமர் மோடி சாண்ட்ரிங்ஹாம் இல்லத்திற்குச் சென்றார். அங்கே பிரதமர் மோடியைப் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் வரவேற்றார்.
அப்போது, மரக்கன்று ஒன்றை சார்லசுக்கு பிரதமர் மோடி வழங்கினார். மேலும்
சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த “Ek Ped Maa Ke Naam” எனப்படும் தாயின் பெயரில் ஒரு மரம் என்ற திட்டத்தால் சார்லஸ் மன்னர் ஈர்க்கப்பட்டார் என அரச குடும்பம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, மன்னர் மூன்றாம் சார்லஸ் உடனான தனது சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்ததாகக் கூறியுள்ளார்.
இந்தியா – பிரிட்டன் இடையிலான உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்தும் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், முதலீடுகள் மற்றும் சுற்றுச் சூழல் தொடர்பாகவும் ஆலோசித்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.