இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் - என்னென்ன இலாபம்?
Jul 26, 2025, 05:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

Web Desk by Web Desk
Jul 25, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – இங்கிலாந்து இடையே மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் தடையற்ற வர்த்தகம் உள்பட பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 2030ம் ஆண்டுக்குள் இரு நாடுகள் இடையிலான வர்த்தகத்தை 120 பில்லியன் டாலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் இந்தியா – இங்கிலாந்து இடையே உறவை மேலும் பலப்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் பிரதமர் கெய்டர் ஸ்டார்மெரை சந்தித்த பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் குறித்து ஆழமாக விவாதித்தார்.

அதன் தொடர்ச்சியாக இரு நாடுகளுக்கு இடையே வரலாற்று முக்கியத்துவமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், இங்கிலாந்து அமைச்சர் ஜோனாதன் ரெனால்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இது குறித்துப் பேசிய பிரதமர் மோடி, இந்தியா – இங்கிலாந்து இடையே பொருளாதார ஒத்துழைப்பில் புதிய அத்தியாயம் தொடங்குவதாக கூறினார். இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமே, இரு நாடுகளுக்கும் இடையே இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வரிகளைக் குறைப்பது அல்லது முழுமையாக நீக்குவதுதான்…. இதன் மூலம் இந்தியப் பொருட்கள் இங்கிலாந்திலும், இங்கிலாந்துப் பொருட்கள் இந்தியாவிலும் மலிவான விலையில் கிடைக்கும்,

இந்திய ஏற்றுமதியில் 99% பொருட்களுக்கு இங்கிலாந்தில் வரி விலக்கு அல்லது வரி குறைப்பு  கிடைக்கும் என்பதால்,  ஜவுளி, தோல் பொருட்கள், ஆபரணங்கள், வாகன  உதிரி பாகங்கள், விவசாய உற்பத்திப் பொருட்கள் அதிக லாபம் ஈட்ட முடியும். அதே நேரத்தில்  இவ்வகை பொருட்கள் இந்தியாவில் மலிவு விலையிலும் கிடைக்கும்.

இந்தியாவில் புதிய முதலீடுகளை ஈர்க்கவும், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் பெரிதும் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஏற்றுமதித்துறைக்கு உத்வேகம் அளிக்கும் இந்த ஒப்பந்தம், இங்கிலாந்து சந்தைகளில் ஐரோப்பிய பொருட்களுக்கு நிகராக இந்திய வேளாண் பொருட்கள் போட்டியிடும் நிலையை உருவாக்கும்.

இந்திய ஜவுளி, தோல் பொருட்கள் ஏற்றுமதி அடுத்த இரண்டு ஆண்டுகளில் இங்கிலாந்து சந்தைகளில் கூடுதலாக 5 சதவிகித இடத்தை கைப்பற்றி  அதிக லாபத்தை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் என்ஜினியரிங் துறைகள் 2030ம் ஆண்டுக்குள் இரட்டிப்பு வளர்ச்சியைப் பெறும் என்றும், அடுத்த நிதியாண்டில் ரசாயன ஏற்றுமதி 40 சதவிகித வளர்ச்சியைப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் ஆபரண ஏற்றுமதி இரட்டிப்பாகும் என்றும், புதிய ஒப்பந்தத்தால், சேவைத்துறையும் ஆண்டுக்கு 20 சதவிகித வளர்ச்சியடையும் என்று கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதால், இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு 6.5 பில்லியன் டாலர்கள் கூடுதல் வருமானத்தைப் பெறும். இங்கிலாந்து நுகர்வோர்கள், குறைந்த விலையில் இந்தியப் பொருட்களைப் பெற முடியும். ஸ்காட்ச் விஸ்கி மீதான இறக்குமதி வரி 150 சதவிகிதத்திலிருந்து 75 சதவிகிதமாகவும், பின்னர் படிப்படியாக 40 சதவிகிதமாகவும் குறைக்கப்படும் என்பதால் இந்தியாவில் அதன் விலை குறைந்து விற்பனை அதிகரிக்கும். இதேபோன்று மின்சார வாகனங்களுக்கான வரி 110 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாகக் குறைக்கப்படும் என்பதால் அதன் விலையும் குறையும்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு இங்கிலாந்து கையெழுத்திட்ட மிக முக்கியமான ஒப்பந்தங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தை 120 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்க  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு இந்த புதிய ஒப்பந்தம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: india vs englandபிரதமர் மோடிIndia joins hands with England: Free trade - what are the benefits?இந்தியா - இங்கிலாந்துதடையற்ற வர்த்தகம்PM Modi
ShareTweetSendShare
Previous Post

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

Next Post

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

Related News

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

நவிமும்பையில் சொகுசு கார் மீது ஏறி நின்று இளம்பெண் ‘ஆரா பார்மிங்’ சாகசம்!

உத்தரப்பிரதேசம் : சங்கூர் பாபா உதவியாளருக்கு சொந்தமான கட்டடம் இடித்து அகற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies