கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 4 கார்கள், 2 லாரிகள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
பெங்களூரு நோக்கி 4 கார்கள் மற்றும் 2 டாரஸ் லாரிகள் சென்று கொண்டிருந்தன. அப்போது முன்னால் சென்ற வாகனம் திடீரென நிறுத்தப்பட்டது.
இதனால் பின்னாலிருந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தொடர் விபத்து காரணமாக 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.