2030ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பிற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன்பே அந்த இலக்கை எட்டிவிட்டதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெட்ரோலுடன் எத்தனால் கலக்கும் திட்டம் 2014ம் ஆண்டு தொடங்கப்பட்டது.தொடக்கத்தில் 1.50 சதவிகித அளவுக்கு எத்தனால் கலக்கப்பட்ட நிலையல், இது 11 ஆண்டுகளில் 13 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 1.36 லட்சம் கோடி ரூபாய் அந்நிய செலாவணி சேமிக்கப்பட்டதோடு, 1.18 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டியுள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சி கச்சா எண்ணெய் இறக்குமதி சார்பைக் குறைக்க உதவியதோடு, அந்நிய செலாவணியைச் சேமிக்கவும் வழிவகுத்திருப்பதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.
கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து, சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க இத்திட்டம் உதவியுள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.