கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அருகே கூடுதல் பேருந்து சேவைகள் கேட்டு பாஜக எம்.எல்.ஏ தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
ராணித்தோட்டம் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகத்திற்குப் பொதுமக்களுடன் சென்ற பாஜக எம்.எல்.ஏ காந்தி அங்கிருந்த அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்தார்.
அதில் பெருஞ்சகோணம் கிராமத்தில் நாள் ஒன்றுக்கு 2 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாகவும், இதனால் மாணவர்கள் உள்ளிட்டோர் அவதி அடைவதாகவும் தெரிவித்தார்.