பிரேசிலில் சரக்கு லாரி பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
போர்டோ அலெக்ராவில் பாலத்தின் மீது கார்களை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது.
பாலத்தின் வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்த வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.