செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி நடைபெறுவதால் சென்னை மற்றும் தாம்பரத்தின் சில பகுதிகளில் 3 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. .
இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பூந்தமல்லி வரை அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள குழாயுடன் இணைக்கும் பணி நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அம்பத்தூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளிலும், தாம்பரம் நகராட்சிக்குட்பட்ட சில இடங்களிலும் வரும் 30ம் தேதி முதல் அடுத்த மாதம் 1ம் தேதி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.