பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றியதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் 99% பொருட்களை பிரிட்டனில் வரியில்லாமல் விற்கும் சூழலை உருவாக்கி இருக்கிறோம் என்றார்.
பிரிட்டன் உடனான வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பயனடையும் என்றும், இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவில் தயாரிப்போம் என்ற குறிக்கோளின் பலத்தை உலகிற்கு பறைசாற்றியது ஆப்ரேஷன் சிந்தூர் என்றும், பயங்கரவாதிகளை அழித்ததில் மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரித்த ஆயுதங்கள் முக்கிய பங்கு” வகித்ததாகவும் பிரதமர் கூறினார்.